வெளிநாட்டில் வித்தியாசமான உடையில் தளபதி விஜய்! இணையத்தை கலக்கும் அசத்தல் புகைப்படம்!



vijay-with-friends-in-abroad-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்த நாள் மற்றும் திரைப்படம் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருவர்.

விஜய் ரசிகர்கள் பலரும் அவரை குறித்து சிறுதகவல்கள் வெளி வந்தாலும், அதனை பெரியளவில் டிரெண்டாக்கி  வருவர். மேலும் தற்போது விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  

vijay

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய் தனது நண்பர்களுடன்  வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை  விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் மிகவும்  வித்தியாசமான போர்வை மற்றும் தொப்பிகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.