திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எங்கள் தெய்வமே.. இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்" - விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு மனதார வேண்டும் ரசிகர்கள்..!!
கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி தனது திறமையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும்போது தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வந்தவர்.
மேலும் தான் உண்ணும் உணவை தன்னுடன் இருக்கும் அனைவரும் உண்ண வேண்டும் என்று நினைத்தவர். அந்த விஷயத்தில் அவருக்கு இணை யாருமில்லை. இதன் பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவங்கி அரசியலிலும் விஜயகாந்த் கால் பதித்தார்.
இவருக்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை கொடுத்து அழகுபார்த்தனர். அரசியல்வாதிகள், ரசிகர்கள் என எவ்வித எதிரியையும் சம்பாதிக்காத ஒரே மனிதர் என்ற பெருமையை தற்போதும் கொண்டிருப்பவர் தான் விஜயகாந்த்.
இன்று அவரது 70-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல்தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படம் தற்போது இணையதளத்தில் அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் அவரது மகன்கள், மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் உள்ளனர். இதனைகண்ட ரசிகர்கள் எங்கள் தெய்வமே. இன்னும் 100 ஆண்டுகள் நீர் இப்புவியில் நிலைத்திருப்பீர் என்று கூறி வருகின்றனர்.