மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எப்படி கம்பீரமாக இருந்த மனிதர் இப்படி உருக்குலைந்து போய்விட்டாரே... விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகைகள் பட்டாளம் உள்ளது. இவரின் படங்கள் பெரும் பாலும் கிராமப்புற மக்களை கவரும் வகையில் இருக்கும் அதனால் நகர் புறத்தை காட்டிலும் கிராம புறங்களில் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். பின்னர் சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் காலடி பதித்தார். தேமுதிக என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக சிறந்து விலகி வந்தார். இந்நிலையில் திடீரென விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே படுத்த படுக்கைக்கு சென்றார்.
தற்போது விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடையவே சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சையில் இருந்து வரும் விஜய்காந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வதந்திகள் பரவின.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகாந்தின் மனைவி பிரேமா லதா விஜயகாந்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகவே அதனை பார்த்த ரசிகர்கள் எப்படி கம்பீரமாக இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என கண்ணீர் கடலில் மூழ்கி வருகின்றனர்.