#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜயகாந்த் நடிக்காமல் விட்டு மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்! எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம்.
தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் விஜயகாந்த். இந்நிலையில் விஜயகாந்த் நடிக்க இருந்து பின்னர் நடிக்க முடியாமல் போயி சூப்பர் ஹிட் ஆனா ஒரு படம் பற்றித்தான் நாம் பார்க்க உள்ளம்.
அது வேறு எந்த படமும் இல்லை. நடிகர் மமூட்டி, முரளி, அப்பாஸ் ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ஆனந்தம் படம்தான். இயக்குனர் லிங்குசாமி இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. முதலில் மம்மூட்டி கதாபாத்திரத்தில் விஜயகாந்தன் நடிப்பதாக இருந்ததாம், பின்னர் ஒருசில காரணங்களால் விஜயகாந்த் விலக மம்மூட்டி அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.