மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது" தொகுப்பாளர் பாவனாவின் பேச்சால் ரசிகர்கள் வருத்தம்.!?
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் முதன் முதலில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் முதன் முதலில் சின்னத்திரையில் ராஜ் டிவியின் மூலம் தொகுப்பாளராக காலடி எடுத்து வைத்தார்.
இதன்பின்பு 2011 ஆம் வருடம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் சீனியர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியன் பிரீமியர் லீக், புரோ கபடி லீக் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான தொகுப்பாளராக இருந்து வரும் பாவனா, அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பாவனா, பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடந்து வரும் வன்கொடுமையை சாதாரணமாக கடந்து செல்பவர்களை நினைத்தாலே பயமாக உள்ளது. பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும், எவ்வாறு அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரின் வீட்டிலும் ஆண்களுக்கும் சொல்லித் தர வேண்டும்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.