பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பொதுஇடத்தில் நயனுக்கு முத்தம் கொடுத்த விக்கி.. வைரலாகும் நயன் - விக்கியின் ரொமான்டிக் ஹனிமூன் போட்டோஸ்..!!
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் நயன் மற்றும் விக்கி இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றிருந்ததை தொடர்ந்து, நயன்தாரா படத்தில் நடிப்பதற்காக மீண்டும் இந்தியா திரும்பினர். அத்துடன் நடிகை நயன்தாரா ஜவான் ஷூட்டிங் சென்ற நிலையில், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியா விழா ஏற்பாடுகளை செய்தார்.
இந்த நிலையில், இருவரும் சில நாட்களுக்கு முன்னதாக இரண்டாவது ஹனிமூனிற்கு பார்சிலோனாவிற்கு சென்றிருந்தனர். அங்கு தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் பொதுஇடத்தில் நயனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.