மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க.. ஆண்டவரின் "விக்ரம்" படத்திற்கு உலகளவில் அங்கீகாரம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், நரேன், செம்பொன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோரும் முக்கிய இடங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்பட்டது. விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படத்தில் நான்காவதாக இத்திரைப்படம் தான் உள்ளது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெறும் உலக புகழ்பெற்ற புசான் சர்வதேச திரைப்பட விழாவில் விக்ரம் திரைப்படமும் திரையிடப்பட இருக்கிறது. வரும் அக்டோபர் 5 முதல் 14 வரை இந்த விழா நடைபெற இருக்கிறது.
சர்வதேச புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக செயல்படும் 'ஓப்பன் சினிமா' பிரிவில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் திரையிடப்படவுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.