திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
40 வகை உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து! ஒன்றாக சாப்பிட்ட விக்ரம் பிரபலங்கள்! யார் யார்னு பார்த்தீங்களா!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம்
கடந்த ஜூன்3 5 மொழிகளில்
உலகம் முழுவதும் வெளியாகி செம ஹிட் கொடுத்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சூர்யா கடைசி 3 நிமிடம் சிறப்பு தோற்றத்தில் நடித்து மிரட்டியுள்ளார்.
விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. படத்தின் மாபெரும் வெற்றியால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா, செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை கிண்டியில் நடைபெற்றுள்ளது.
இதில் விக்ரம் படக்குழு கலந்து கொண்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அசத்தலான 40 வகை உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விருந்தில் உலகநாயகன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து ருசித்து சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.