மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்ரம் பிரபுவின் புதிய படம் பற்றிய மாஸ் அப்டேட்!
வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய கடினமான உழைப்பினாலும் திறமையினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும் மக்கள் திலகம் பிரபுவின் மகனுமாவார். கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் இவன் வேற மாதிரி மற்றும் அரிமா நம்பி போன்ற வித்தியாசமான கதையம்சங்களைக் கொண்ட ஆக்சன் திரில்லரில் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான பொன்னியின் செல்வனில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ' பாயும் ஒளி நீ எனக்கு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்தப் படத்தை கார்த்திக் அத்வைத் என்பவரே தயாரித்து இயக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் தனஞ்செய் ஆனந்த், வேலா ராமமூர்த்தி மற்றும் பிரசன்னா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சாகர் மகதி என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான இந்தப் படத்தின் டீசர் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
இந்தத் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்பதுதான் அந்த செய்தி. பொதுவாக தமிழில் மட்டுமே வெளியாகி வந்த விக்ரம் பிரபுவின் திரைப்படங்கள் தற்போது மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.