ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸால் எனது மன நிம்மதியை இழந்தேன்.. புலம்பித் தள்ளும் வினுஷா.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் வினுஷா தேவி. இந்த சீரியல் முடிந்த உடனே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் தொடக்கத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் விரும்பி தான் சென்றேன். நான் நினைத்து சென்றது வேறு. நடந்தது வேறு. என்னுடன் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் என்னை அதிகளவில் காயப்படுத்தியது.
எனக்கு முன்னால் கேலி கிண்டல் செய்தவர்களை விட பிட்டால் செய்தவர்கள் தான் அதிகம். குழுவாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது சாதாரணம் தான். ஆனால் இந்த முறை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்கள். கண்டன்ட் வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் என்னை மட்டம் தட்டி எனக்கு பின்னால் பேசியதால் உண்மையில் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகினேன். பிக்பாஸ் என்ற விளையாட்டையும் தாண்டி என்னுடைய மன நலன் தான் முக்கியம் என்று நினைத்தேன். தற்போது வெளியில் வந்ததும் நிம்மதியை உணர்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.