மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுறா படத்தில் எதுக்கு நடிச்ச? என்று கேட்ட பிரபலத்திற்கு விஜய் சொன்ன பதில்.!
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக இருப்பவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் நடித்த ஆரம்பகால படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், பலரும் விஜயை இது ஒரு மூஞ்சியா என்ற அளவிற்கு கிண்டலடித்து கலாய்த்து ஒதுக்கினர்.
இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்று அடையாளம் காணப்பட்ட விஜய், இன்று தளபதி விஜயின் தந்தை என்று சொல்லும் அளவுக்கு தன் கடின உழைப்பால் உயர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.
தனது 10வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 18 வயதில் ஹீரோவாக அறிமுகமான விஜய்க்கு, பூவே உனக்காக படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து இவரது 50வது படமான "சுறா" பெரும் தோல்வியை சந்தித்தது.
இதுகுறித்து விஜயிடம் பேசிய மறைந்த நடிகர் மனோபாலா "சுறா படத்துல எதுக்குப்பா நடிச்ச?" என்று கேட்டாராம். அதற்கு விஜய் "கதை கேட்கும் போது எனக்கு பிடித்திருந்தால் ஒப்புக்கொண்டேன்" என்று விஜய் கூறினாராம். இதை விஜய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.