பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஆண் குழந்தை; அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இந்திய கிரிக்கெட் உலகில் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரராக இருப்பவர் விராட் கோஹ்லி. இவர் கடந்த 2017ம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை கரம்பிடித்தார்.
தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். அதனைத்தொடர்ந்து, நடிகை அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், நடிகை அனுஸ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்தாலும், தற்போதே தம்பதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் பிரசவத்தில் உடன் இருப்பதை உறுதி செய்யவே, நடப்பு இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகி இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.