மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருமன் பட வெற்றிக்காக கார்த்திக் செய்த மாஸ் சம்பவம்.. மக்களோடு மக்களாக மிகச்சிறப்பு..!!
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சூரி ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் மற்றும் கருணாஸ் போன்ற பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 2021 செப்டம்பரில் பூஜையுடன் துவங்கி, மதுரை மற்றும் தேனி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் கஞ்சா பூவு கண்ணால பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் மாபெரும் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றதை தொடர்ந்து, பல பிரபலங்களும் அதில் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் இன்று அதிகாலை நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இசை வெளியீட்டுக்காக மதுரை வந்த கார்த்திக் அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
.இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்தி அண்ணன் அவர்கள் தரிசனம்
— ꧁♥︎ Pavithran Rm ♥︎꧂ (@PavithranRm) August 4, 2022
#VirumanTrailer 💥 #Karthi@Karthi_Offl 💥🎇🧨 @prabhu_sr @dir_muthaiya@AditiShankarofl @Suriya_offl @rajsekarpandian @thisisysr #Karthi24 #Viruman #PonniyinSelvan #PS1 #Kaithi2 #Suriya pic.twitter.com/eX1CRejydv