மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்வர் நினைத்தாள் அதை ஒரே நாளில் செய்யமுடியும்! நடிகர் விஷால் பேட்டி!
நடிப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்கம் என படு பிசியாக உள்ளார் நடிகர் விஷால். இதற்கிடையில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை ஏற்பட்டு செய்து வெற்றிகரமாக முடித்துள்ளார். மேலும், இந்த விழா மூலம் சேர்ந்த தொகைக்கான விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார் விஷால்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் எட்டப்பாடியை சந்திக்க வந்தார் விஷால். முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த விஷாலிடம் முதல்வருடனான சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஷால் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்ததாக விஷால் கூறினார்.
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் பற்றி விஷாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் தமிழ்ராக்கர்ஸில் உடனுக்குடன் படம் வெளியாவது குறித்து என் மீது குற்றம் சாட்டுபவர்கள் அத்தோடு நின்று விடுகிறார்கள். என்னுடன் இணைந்து அவர்களை ஒழிக்க களம் இறங்குவதில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து கூறுகிறேன். இதே அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸை ஒழித்துவிட முடியும்’ என்றார் விஷால்.