மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவரா! தனுஷ்க்கு தம்பியாகும் பிரபல முன்னணி நடிகர்! யாருன்னு தெரிஞ்சா ஷாக்கிடுவீங்க!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து தனுஷ் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் கூட்டணியில் இணைந்து நடிக்க உள்ளார். நானே வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டதாக உருவாக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும், அவர் தனுஷுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.