#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"வெறுப்பை பரப்பாதீர்கள்" மனம் வருந்தி பதிவிட்ட விஷ்ணு விஷால்.. என்ன காரணம்.!
2009ஆம் ஆண்டு "வெண்ணிலா கபடிக்குழு" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று, மாவீரன் கிட்டு, கதாநாயகன், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் "லால் சலாம்" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஷ்ணு விஷால் சில தினங்களுக்கு முன் கமல் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
மேலும் இப்பதிவில் "சூப்பர் ஸ்டார்ஸ் ஆர் சூப்பர் ஸ்டார்ஸ் போர் எ ரீசன்" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின் சிறிது நேரத்திலேயே " ஸ்டார்ஸ் ஆர் ஸ்டார்ஸ் போர் எ ரீசன்" என்று மாற்றிவிட்டார். இது இணையத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து விளக்கமளித்து மீண்டும் பதிவிட்ட விஷ்ணு, "சூப்பர் ஸ்டாராக உள்ள அனைவரையும் நான் நேசிக்கிறேன். பதிவை எடிட் செய்ததால் நான் பலவீனமானவன் அல்ல. நமக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அன்பை பரப்புங்கள். வெறுப்பை அல்ல. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.