புது மாப்பிள்ளை ராணாவை கிண்டல் செய்து வாழ்த்திய விஷ்ணு விஷால்! என்ன சொல்லி கலாய்த்துள்ளார் பார்த்தீர்களா!



vishnu-vishal-wedding-wishes-to-actor-rana

பிரமாண்டமான பாகுபலி திரைப்படத்தில் வில்லன் பல்வாள்தேவனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராணா டகுபதி. இவர் தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ராணா ஹைதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில்,  மிகவும் எளிமையாக சமீபத்தில் ராணா மற்றும் மிஹீகா திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

vishnu vishal

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால்  சமூக வலைதளத்தில் நடிகர் ராணாவை கிண்டல் செய்து, அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர்,  ஒருத்தர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்வதை பற்றி நினைக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த போட்டோவில் இருப்பது, அந்த யாரோ ஒருத்தர் மாதிரி இருக்கிறதே என்று கூறி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். இதற்கு ராணா, சில ஆண்டுகள் கடந்துவிட்டதே..நன்றி பிரதர் என்று பதிலளித்துள்ளார்.