கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
அவரு கரெக்ட்டாதான் சொல்லியிருக்காரு!! விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஜே அஞ்சனா!! ஏன்னு பார்த்தீங்களா.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி நீயா நானா. இதில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புடன் விறுவிறுப்பாக விவாதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வாரம் கணவனைவிட அதிகம் படித்து சம்பாதிக்கும் பெண்கள். இந்த சூழ்நிலையில் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் படித்த பெண் ஒருவர், படிக்காத தனது கணவர் குழந்தையின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை எழுத்துக் கூட்டி ஒரு மணி நேரமாக படிப்பதாக நக்கலாக கூறியுள்ளார். அதற்கு அந்த கணவர் மிகவும் அப்பாவித்தனமாக தனது மகள் எடுத்த மதிப்பெண்களை நீண்ட நேரம் பெருமிதத்தோடு பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் அவரை சிறந்த தந்தையாக கௌரவித்து அவரது மகள் கையாலேயே பரிசு கொடுக்கிறார்.
மேலும் அந்த பெண் தனது அப்பா தோற்கவில்லை எனக்கூறி அவரை நெகிழ வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி பலரும் கோபிநாத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இதனை பகிர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும். முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று என பதிவிட்டுள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் சேர்ந்ததன்று என்ற வார்த்தையை தவறாக புரிந்துகொண்டு அவரை மோசமாக விமர்சனம் செய்தனர்.
சேர்ந்ததென்று nu type pannalaye! சேர்ந்ததன்று nu correcta dhana type panniyirukaaru!
— Anjana Rangan (@AnjanaVJ) September 12, 2022
சேர்ந்தது + அன்று meaning சேர்ந்தது அல்ல ! சுத்தமான தமிழ்! Correcta dhana type panni irukaaru! Idhu puriyama evlo comments! 🤦♀️ https://t.co/6RlU2p3OKv
இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா அந்த பதிவை பகிர்ந்து, "சேர்ந்ததென்று னு டைப் பண்ணலயே! சேர்ந்ததன்று னு கரெக்டாதான் டைப் பண்ணிருக்காரு! சேர்ந்தது + அன்று அர்த்தம் சேர்ந்தது அல்ல. சுத்தமான தமிழ். கரெக்டாதான் டைப் பண்ணியிருக்காரு! இது புரியாம எவ்ளோ கமெண்ட்ஸ்!" என்று விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களும் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.