பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த சேனல் பக்கம் போகமாட்டேன்., என் ஆங்கரிங் கனவை நாசமாக்கிட்டாங்க - விஜே பாவனா ஓபன்டாக்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி விஜே பாவனா. இவர் தனித்துவமான குரல் வளத்தை கொண்டவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாவனா கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்க்கவில்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அப்போது இவர் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அவர், "விஜய் தொலைக்காட்சி நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
புதிய தொகுப்பாளினிகள் வந்ததால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினார்கள். எனது ஆங்கரிங் கனவை நாசமாக்கியதே அவர்கள் தான். இதனால்தான் அந்த சேனலில் இருந்து விலகி வேறு சேனலுக்கு வந்தேன். இனி அந்த சேனல் பக்கம் போகமாட்டேன்.
பெரும்பாலும் தொகுப்பாளினிகள் பிற்காலத்தில் சினிமாவில் நடிப்பார்கள். எனக்கு நடிப்பு வருமா? என்ற சந்தேகத்தில் சினிமாவில் நடிக்க செல்லவில்லை. எனவே ஆங்கரிங் சம்பந்தமாகவே வேலை பார்க்கலாம் என்று இருந்தபோதுதான் எனக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் இருந்து அழைப்பு வந்தது. அதனை நான் ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்தார்.