பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த நள்ளிரவில்.. விஜே சித்ரா தற்கொலைக்கு முன் ஹோட்டலில் நடந்தது என்ன.? கணவர் வெளியிட்ட பகீர் தகவல்.!
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே நட்சத்திர ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர்தான் காரணம் என கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் கூட ஹேம்நாத் சித்ராவின் மரணத்திற்கு முக்கிய அரசியல்வாதிக்கு தொடர்புள்ளது, எனது உயிருக்கும் ஆபத்து என காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது ஹேம்நாத் பேட்டி ஒன்றில் முதன்முறையாக சித்ரா இறப்பதற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சூட்டிங் முடிந்து சித்ரா இரவு ஒன்றரை மணியளவில் ஹோட்டலுக்கு வந்தார். அவர் வரும் போதே பல குழப்பத்துடன் காணப்பட்டார். ஆனால் ஹோட்டலுக்கு வருவதற்கு முன் என்னிடம் போனில் பேசும்போது மிகவும் நன்றாகப் பேசினார். ஐ லவ் யூ கூறினார்.
அவர் வந்த பிறகு எப்போது என்னை கட்டிப்பிடித்து பேசுவார்.
ஆனால் அன்று அப்படி இல்லை. அவர் பிரச்சினையில் இருந்தார். அப்பொழுது நானும் அவரை எதுவும் கேட்டு புண்படுத்த வேண்டாம் என அமைதியாக இருந்தேன். மேலும் அவரும் எதுவும் பேசாமல், நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்காமல் வெறிக்க ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பின் எப்போதுமே நைட் சூட்டிங்கிலிருந்து வந்தபிறகு அவர் குளிப்பார். அதனால் ரூம் உள்ளே சென்றபோது அவர் குளிக்க சென்றுவிட்டார் என எண்ணி நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
ரொம்ப நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. அவர் அழுது கொண்டிருக்கிறார் என நினைத்து கதவைத் தட்டினேன். அவர் திறக்கவில்லை. பின் ஹோட்டலில் மற்றொரு சாவியை வாங்கி திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருந்தார். அவர் சும்மா விளையாடுகிறார் என எண்ணியே நான் கயிறை கழட்டி முதலுதவி செய்தேன். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளார்.