#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் என்ன டிரஸ் போடணும் னு நீ எனக்கு சொல்லத் தேவையில்லை!" நெட்டிசனை விளாசிய வி ஜே பார்வதி!
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் வி ஜே பார்வதி. இவர் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் யூடியூப் தளங்களில் ஆர் ஜே வாக இவர் பொது இடங்களில் பொதுமக்களை சந்தித்து பிராங்க் ஷோ நடத்தி பிரபலமானார்.
சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான "சர்வைவர்" நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் கடுமையான டாஸ்கை கூட எளிதில் செய்து முடித்து அனைவரின் கருத்தையும் கவர்ந்தார். மேலும் விஜய் டிவியின் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் வி ஜே பார்வதி.
மேலும் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ள இவர், தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் "குட்டி மியா கலிஃபா" என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் வி ஜே பார்வதி.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த ஆபாச கருத்துக்கு பதிலளித்த இவர், "பெண்களை எப்போதும் காமப்பொருளாகத் தான் பார்ப்பீங்களா? நான் என்ன உடை போடவேண்டும் என்று நீ சொல்லத் தேவையில்லை. பெண்கள் கவர்ச்சிக்காக மட்டும் தான் என்ற எண்ணத்தை மாற்றுங்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.