மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதுவும் உன்னால.. இப்படி ஒரு நிலைமை வருமுன்னு நான் நினைக்கல.. கண்ணீருடன் விஜய் டிவி ப்ரியங்கா போட்ட பதிவு..
மறைந்த நடிகை சித்ராவின் கடைசி தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொகுப்பாளினி ப்ரியங்கா.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை சினிமா பிரபலங்கள் முதல் அவரது ரசிகர்கள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இரு மாதங்களுக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹேம்நாத் கொடுத்த மனஅழுத்தம்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஹேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் சித்ரா கடைசியாக பங்குபெற்ற நிகழ்ச்சி ஸ்டார்ட் ம்யூசிக். இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் அவரது அழகிய சிரிப்பால், நடனத்தால், சின்ன சிறு சேட்டையால் மக்களை மகிழ்வித்து நம்மைவிட்டு வெகுதூரம் சென்று விட்டார் சித்ரா.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, சித்ராவுடன் தான் கடைசி தருணங்களில் இருந்த புகைப்படங்களை ஷேர் செய்து இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஒரு நிலைமையில் ஷேர் செய்வேன் என ஒரு நாளும் எதிர்ப்பார்க்கவில்லை என மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.