திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சென்னை கைவிட்டது.! தெலங்கானா காப்பாற்றியது!" வி ஜே ரம்யா சர்ச்சைப் பதிவு!
2014ம் ஆண்டு "மிஸ் சென்னை" போட்டியில் கலந்து கொண்டவர் வி ஜே ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்பிரமணியன். இதையடுத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2, நம்ம வீட்டுக்கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் 2007ம் ஆண்டு வெளியான "மொழி" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆட்டம் முடிந்தது, ஆடை, குரு, சங்கத்தலைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் மாநில அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தற்போது பிட்னஸ் ட்ரைனராக இருக்கும் ரம்யா, தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் "சென்னை கைவிட்டதாகவும், தெலங்கானா காப்பாற்றியதாகவும் கூறி தெலங்கானாவுக்கு பயணிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சென்னைக்கு திரும்பி வராதீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.