திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
VJ ரம்யாவா இது.?! அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் டிவி பிரபலம்.!
விஜய் டிவியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் VJ ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன். 2004 ஆம் ஆண்டு 'மிஸ் சென்னை அழகி' போட்டியில் பங்கேற்ற இவர் அதன்பிறகு விஜய் டிவியில் இணைந்து கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.
2006 ஆம் ஆண்டு வெளிவந்த மொழி திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார் இவர். 2015 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'ஓ காதல் கண்மணி' என்ற திரைப்படத்தில் இவர் நடித்த அனாமிகா என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. 2014ஆம் ஆண்டு அப்புறம் அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
தற்போது நடிப்பு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் VJ ரம்யா, பிரபலமான பெண்கள் மேகஸினில் உடற்பயிற்சி பற்றிய கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் பத்திரிகைகளில் உடற்பயிற்சிக்கான அட்டைப்பட மாடலாகவும் இவர் இடம் பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா தீவிரமான உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து இன்ஸ்டாகிராமில், பதிவேற்றிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அந்தபுகைப்படங்கள் தற்போது வைரலாகி இருக்கின்றன.