மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தன்னுடைய ஃபேவொரிட் ஷோவில் இருந்து விலகுகிறாரா வி.ஜே. பிரியங்கா.?
வெள்ளித்திரை பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருந்து வருகிறது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியை வி.ஜே.பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர். இந்த நிலையில் தொகுப்பாளர்களான இவர்கள் இருவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பலரும் பார்க்கத் தொடங்கினர். ஆனாலும் வி.ஜே பிரியங்கா விஜய் டிவிக்கு வருவதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் வி.ஜே. பாவனா.
இந்த சூழ்நிலையில்தான் சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு வி.ஜே.பாவனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகயில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.