அடைத்து வைத்து பாலியல் தொல்லை! கதறிய நடிகை! அதிரடியாக கைது செய்யப்பட்ட இளம் இயக்குனர்!



web-series-director-arrested-for-sex-abuse-heroine

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். 25  வயது நிறைந்த  இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கி வந்த த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்டு ஒன்றில் நடைபெற்று வந்தது. அங்கு ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக் மற்றும் ரியாஸ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

மேலும் இந்த வெப் தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயது இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த நிலையில் அந்த நடிகை சமீபத்தில் இயக்குநர் ரஞ்சித் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். 

director

அதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகையின் பெயரை தனது கைகளில் பச்சை குத்திக்கொண்டு அவரை தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்தது உறுதியானது. மேலும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ரஞ்சித் நடிகையை தாக்கியதும் தெரியவந்தது. மேலும் அந்த நடிகை தன்னை ஷூட்டிங் பங்களாவில் அடைத்து வைத்து ரஞ்சித் தனக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.