மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாரை விட தமன்னாவை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? - சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கேள்வி.!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தமன்னா, மோகன்லால் சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி சராஃப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தவில்லை என்ற ஒரு சர்ச்சை நிலவி வருகிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் பிரபல சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு இது அனிருத் மற்றும் நெல்சனின் கூட்டு சதி என சர்ச்சு அளிக்கும் வகையில் பேட்டி கொடுத்திருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் அவர் சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்றால் அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் மற்றும் பஞ்ச் டயலாக் தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஜெயிலர் படத்திலிருந்து வெளியாகி இருக்கும் முதல் பாடலில் தமன்னாவை முன்னிலைப்படுத்தி வெளியிட்டு இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களை பற்றி தெரிந்தும் தமன்னாவை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.