#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கமல் மகளின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட நபர் இவரா? போலீசில் வளையத்தில் முக்கிய புள்ளி!
உலகநாயகன் கமலஹாஷனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் தற்போது சினிமாவில் நடித்துவருகின்றனர். முதல் மகள் ஸ்ருதிகாஷன் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் பாலிவுட்டில் ஒருபடத்தில் நடித்துள்ளார். பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அக்ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதை யார் வெளியிட்டார் என யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த நடிகை அக்ஷராஹாசன் அந்த புகைப்படங்கள் ஒரு குறும் படத்திற்காக எடுக்கப்பட்டவை, அதை யாரோ இணையத்தில் பரப்பியுள்ளார் என கூறினார்.
பின்னர் இது தொடர்பாக மும்பையில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்வானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரோ அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படம் வெளியானதற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.