தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இவர்களுக்கெல்லாம் கட்டாயம் அழகான மனைவி கிடைப்பார்களாம்! அப்போ உங்களுக்கு?
அழகான வாழ்க்கைத்துணை அமையவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். அழகோடு சேர்த்து அறிவும் அதிகம் இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான். ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை இருந்தால் அவர்களுக்கு அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்.
ரிஷபம் மற்றும் துலாம்: தங்களது வாழ்க்கையில் கிடைக்கும் அனைத்தையும் ரசித்து, ருசித்து மகிழக்கூடியவர்கள் இந்த ராசி காரர்கள். தாங்கள் உண்ணும் உணவை கூட ரசித்து, ருசித்துதான் உண்பார்களாம். அதேபோல் உண்ணவு உண்ணும் இடம் கூட சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்களாம்.
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம் எகின்றது ஜோதிட சாஸ்திரம். அதேபோல தனுசு, கடகம் ராசிக்காரர்கள் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக இருப்பார்களாம் அதனால் ஒருவரின் புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள்.
மகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக்காரர்கள் எல்லாம் கவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்வார்களாம். இவர்களது இஷ்டத்திற்கு வாழ்க்கை துணை அமைவது சற்று கடினம்தானாம்.
ஒருவேளை இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளதாம்.
கன்னி, மீனம் மற்றும் மிதுனம் ராசிகாரர்கள் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் தங்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட தெளிவாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் அனைவருமே ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என்று அனைவரை பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்வார்கள்.
மேலும் இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.