மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் படத்தின் வாய்ப்பு... உதறித் தள்ளிய விக்ரம்... இதான் காரணமா.?
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று தன்னை வருத்தி நடிப்பது சியான் விக்ரம் மட்டுமே. இந்த அளவிற்கு நடிப்பின் மீது தீராத காதல் கொண்டவர் இவர்.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் வரலாற்று பின்னணி கொண்ட இந்த கதை பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதற்கான படப்பிடிப்புகள் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ரஜினியின் 170 வது திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விக்ரமிடம் பேசியிருக்கிறார்கள். அவருக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளமாக வழங்கவும் லைக்கா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது ஆனால் விக்ரம் அந்த ஆஃபரை மறுத்து இருக்கிறார்.
அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ரஜினி நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் தங்கலான் திரைப்படம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக விக்ரம் இந்த முடிவை துணிந்து எடுத்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.