53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உலக அளவில் மரண மாஸ் காட்டிய மெகாஹிட் தமிழ் திரைப்படங்களின் ஒரு தொகுப்பு!
தென்னிந்திய சினிமா என்றாலே மாஸ்தான். அதிலும் தமிழ் சினிமாவிற்கென்று மிகப்பெரும் பேறும் புகழும் உள்ளது. அந்த வகையில் உலக அளவில் மாபெரும் வெற்றிபெற்ற தமிழ் சினிமாவின் பெயரை நிலைநாட்டிய படங்களை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.
1. தசாவதாரம்
நடிகர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் படம் தமிழ் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் பெறும் பரபரப்பாக பேசப்பட்டது. இயக்குனர் KS ரவிக்குமார் இயக்கத்தில் உருவான தசாவதாரம் திரைப்படம் உலகளவில் பேசப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஓன்று.
2. பாகுபலி 1 மற்றும் 2
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே மாபெரும் வெற்றிபெற்றது. மிகவும் பிரமாண்டமாக உருவாகிய இரண்டு பாகங்களுமே இந்திய சினிமாவை உலக அளவில் மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து சென்றது.
3. மெர்சல்
இயக்குனர் அட்லீ இயக்கத்தி தளபதி விஜய் நடிப்பில் மிக பெரிய சர்ச்சைகளை சந்தித்து வெளியான திரைப்படம்தான் மெர்சல். AR ரஹ்மான் இசையமைப்பில் உருவான ஆளப்போறன் தமிழன் பாடல் உலமா முழுவதும் மிகவும் பிரபலமானது. மேலும் மெர்சல் படத்தை அங்கீகரிக்கும் வகையில் நடிகர் விஜய்க்கு உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
4. எந்திரன்
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டங்களில் ஓன்று. இந்திய அளவில் பாலிவுட் ஸ்டார்களையெல்லாம் மிரள வைத்த திரைப்படம் எந்திரன். உலக அளவில் எந்திரன் திரைப்படத்திற்கென்று தனி அங்கீகாரம் உள்ளது.
5. விஸ்வரூபம் 1
ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் கமல்ஹாசனின் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தது. சர்வதேச அளவில் நல்ல மற்றும் கருப்பு படமாக பிரிக்கப்பட்டது. இருந்தாலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்ஷனில் ரூ.100 கோடி வசூல் படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.