#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'13 வயதில் ஒருவன் என்னய' - பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்த்: அதிர்ச்சி தகவல் சொன்ன நடிகை.!
தமிழ் திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட யாஷிகா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
கவலை வேண்டாம் படத்தின் வாயிலாக தொடங்கிய அவரின் திரை வாழ்க்கை துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, பெஸ்டி, தி லெஜண்ட் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படம் வெளியானது. இவன் தான் உத்தமன், ராஜா பீமா, பாம்பாட்டம் உட்பட 5 படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
இந்நிலையில், தனக்கு 13 வயதில் நடந்த பாலியல் தொல்லை குறித்து நடிகை யாஷிகா அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது, நடிகை யாஷிகாவின் 13 வயதில், நடிகர் சந்தானம் நடித்திருந்த இனிமே இப்படித்தான் படத்தின் படப்பிடிப்பில் அவருக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் பதறிப்போன யாஷிகா அவரை எட்டி உதைத்து அங்கிருந்து வந்தார். இந்த உதை இன்று வரை என்னால் மறக்க முடியாது. பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.