#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எப்போதும் 'எதிர் நீச்சல்' நாடகம் தான் நம்பர் '1'! ஏன்!
தற்போதைய காலகட்டத்தில் சினிமாக்களை விட சின்னத்திரை சீரியல்களை மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பெண்களின் அத்தியாவசிய பொழுதுபோக்காக இருப்பது சீரியல்களாகும்.
'90' களில் சன் டீவியில் ஒளிபரப்பப்பட்ட கோலங்கள் தொடர் ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றிருந்தது. அந்த கோலங்கள் தொடரை இயக்கியவர் தான் திருச்செல்வம். தற்போது அவர்தான் சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக சன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது சன் டிவியில் 2 புதிய சீரியல்கள் வெளியாகியுள்ள நிலையிலும் எதிர்நீச்சல் தொடர் வெற்றிகரமாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று அதன் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலின் திரைக்கதையே அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் அந்த சீரியலில் வரும் குணசேகரன் என்ற எதிர்மறை கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. பிரபல நடிகரான மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
பெண்களின் உரிமை, பெண்களுக்கான பொருளாதார நிலை, வீட்டில் நடக்கும் அடிமைத்தனம், ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம் போன்றவற்றை அப்படியே திரைக்கதையாக எடுப்பதினால் எத்தனை புதிய சீரியல்கள் ஒளிபரப்பானாலும் எதிர்நீச்சல் அதன் எதிர்பார்ப்பை குறைக்காமல் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.