மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா என்னவொரு லவ்.. யோகேஷ் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ்! இன்ப அதிர்ச்சியில் உருகிய மைனா நந்தினி!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் நந்தினி. அதனை தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். மேலும்
வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை நந்தினி சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது மைனா நந்தினி தனது கணவருடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த போட்டிகளில் ஜெயிக்கும் கணவர்கள் மனைவிக்கு பரிசு கொடுக்கும் காதலா காதலா என்ற டாஸ்க் நடைபெற்றது. அப்பொழுது போட்டியில் வெற்றி பெற்ற யோகேஷ் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரது உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தியிருந்தார். இந்த நிலையில் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நந்தினி உருக்கமாக, நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்னை மாதிரிதான் கணவர் இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.