திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#பரபரப்பு_வீடியோ : நடிகர் யோகி பாபுவுக்கு தீண்டாமை கொடுமை.. கோவிலில் நேர்ந்த அவமானம்.!
பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருகின்றார். அவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஓரிரு படங்களிலாவது ஹீரோவாக நடித்து விடுகிறார்.
இவர் ஹீரோவாக நடிக்கின்ற படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுக்கின்றனர். இவரது கவுண்டர்களுக்கும், நகைச்சுவையான துடிப்பான பேச்சிற்க்கும் இளம் தலைமுறையினர் கூட்டம் ரசிகர்களாக இருக்கின்றனர்.
இவருக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது. மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்ட யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபடுவார். இதை ரசிகர்கள் பலரும் பார்த்துவிட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்வார்கள்.
தீண்டாமை ஒரு பாவச்செயல்.😷 pic.twitter.com/LYnz0e5sZE
— ரத்தினவேல் மரைக்காயர் (@Pothumda) August 6, 2023
அந்த வகையில் சமீபத்தில் யோகி பாபு ஒரு கோவிலுக்கு சென்ற போது அவர் தீண்டாமை கொடுமையை அனுபவித்தார் என்ற சர்ச்சையுடன் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கோவில் குருக்களுக்கு யோகி பாபு கை கொடுக்க முயற்சித்த போது அந்த குருக்கள் அதை மறுத்துவிட்டு கை காட்டுகிறார். யோகி பாபுவை அவர் தீண்ட மறுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.