மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் கதை சொல்பவர்களின் கஷ்டத்தை கேட்டு தான் நடிக்கிறேன்" யோகி பாபு உருக்கம்..
லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, அதன்பின்னர், தமிழ் சினிமாவில் அமீர் நடித்து வெளிவந்த யோகி படத்தில் அறிமுகமானார், யோகி பாபு. இதைத் தொடர்ந்து பையா, அட்டகத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா என பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் மிகுந்த கவனம் பெற்றது. மேலும் யோகிபாபு ரஜினியுடன் ஜெய்லர் படத்திலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜவான்' படத்திலும் நடித்துள்ளார். தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், 'லக்கி மேன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய யோகி பாபு, " எந்த படத்திலும் நான் கதையைக் கேட்டு நடிப்பதில்லை.கதை சொல்ல வருபவர்களின் கஷ்டத்தை கேட்டு தான் நடிக்கிறேன்.
இதனால் பல இயக்குனர்கள் உருவாகியுள்ளனர். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை" என்று கூறினார். முன்னதாக , கௌசிக் ராமலிங்கம் இயக்கிய "ஜாக் டேனியல்" படத்தில் நடித்த 20லட்சம் முன்பணம் பெற்றதாகவும், ஆனால் யோகி பாபு படப்பிடிப்பில் ஒரு நாள் கூட வரவில்லை என்ற சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.