மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படியே சித்ரா உருவத்தில் இருக்கும் இளம் பெண்.. இவர்தான் அடுத்த முல்லையா.? வைரலாகும் புகைப்படங்கள்
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவை போலவே இருக்கும் இளம் பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை சித்ரா. குறுகிய காலத்தில் மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் இன்று இந்த உலகில் இல்லை என்பதை அவரது ரசிகர்களால் இன்றுவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பெரிய வெற்றிக்கு காரணம் கதிர் - முல்லை ஜோடி என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது சித்ரா தற்கொலை செய்துகொண்டதால் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகை சரண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும், அது குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. இந்நிலையில் கீர்த்தனா தினகர் என்ற இளம் பெண் ஒருவர், நடிகை சித்ரா போலவே உடை அணிந்து, அவரை போலவே போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பார்ப்பதற்கு அச்சு அசல் முல்லை போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்த பெண்ணை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் எனவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துவருகின்றனர்.