#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளிக்கு உடை எடுத்துக் கொடுத்த பிரபல யூட்யூபர்..
முன்பெல்லாம் பிரபலமாக வேண்டும் என்றால் திரைத்துறையின் மூலமாக மட்டும் தான் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க முடியும். ஆனால் தற்போது பல வழிகளில் பிரபலமாக முடியும். பலருக்கும் சமூக வலைதளம் ஒரு பாலமாக இருந்து வருகிறது.
இதன்படி சமூக வலைதளத்தில் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறது, அதே அளவிற்கு தீமையும் இருந்து வருகிறது. சமீபத்தில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வந்தது தான் ஜாமீன் கிடைத்தது.
இது போன்ற நிலையில், தற்போது பிரபல யூ ட்யூப்பரான ஆரிப் ரஹ்மான் என்பவர் தனது காரை விற்று எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கு தீபாவளி உடைகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி இவரை பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.