மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் மூலம் விஜய் படத்தின் வாய்ப்பைப் பெற்ற பிரபல பாடகர்.. யார் தெரியுமா?
மறைந்த பின்னணி பாடகர் மலேசிய வாசுதேவனின் மகனும், பாடகரும் நடிகருமான யுகேந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களுடைய மீண்டும் பிரபலமானார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்டரி கொடுக்க உள்ளார். அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யுகேந்திரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் யுகேந்திரன் விஜயுடன் சேர்ந்து யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.