மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. சாராவின் எதிர்கால கனவு என்னனு பார்த்தீங்களா.! வித்தியாசமா யோசிக்கிறாரே! வாயடைத்துப் போன அர்ச்சனா!!
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கிய அவர் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் சில காலங்கள் தனது வேலைக்கு இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே ரீச்சானார். தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தனது மகள் சாராவுடன் தொகுத்து வழங்கி வருகிறார்.
சாரா சிறுவயதிலேயே மிகவும் பக்குவமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் ஒன்றாக பிரபல ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது அர்ச்சனா சாராவிடம், நீங்கள் பெரியவளானதும் என்னவாக நினைக்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் baker ஆக போகிறேன். நல்ல சுவையான, உடம்பிற்கு ஆரோக்கியமான பல கேக் போன்ற உணவுபொருட்களை செய்பவராக ஆகபோவதாக கூறியுள்ளார். அதனை கேட்டு அர்ச்சனா வாயடைத்துப் போயுள்ளார்.