மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நம்பி வந்த பெண்ணை, நண்பனுக்கு விருந்தாக்கிய கயவன்.. பெண்ணின் தந்தை அதிரடி முடிவு.!
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் சட்ட கல்லூரியில் படித்து வந்த ஒரு பெண்ணும் வம்சி என்ற வாலிபரும் ஒரு வருடமாக நெருக்கமாக பழகி காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தனது காதலியுடன் வம்சி கிருஷ்னா நகரில் அமைந்துள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். அங்கு காதல் ஜோடி இருவரும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இதை மறைமுகமாக வம்சியின் தோழர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
துரோகியான
காதலன் :
இது அந்தப் பெண்ணின் காதலன் வம்சிக்கும் தெரியும். அந்த மோசக்காரனும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளான். இந்த வீடியோவை அந்த பெண்ணிற்கு அனுப்பி தங்கள் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி அந்த கும்பல் பெண்ணை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது. இதற்கு துரோகி வம்சியும் உடந்தையாக இருந்துள்ளான்.
தற்கொலை
முயற்சி :
இதனால், உடல் சோர்வடைந்து மனநலமும் குன்றி அந்தப் பெண் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த நவம்பர் 18ல் அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது பெண்ணின் தந்தைக்கு தெரியவந்து தனது பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து கண்ணும் கருத்துமாக கவனித்ததுடன் மட்டுமல்லாமல் காவல் நிலையத்திற்கு சென்று அந்த பெண்ணின் துயர சம்பவத்திற்கு முடிவு கட்டியுள்ளார்.
கைதான
கயவர்கள் :
துரோகி வம்சி மற்றும் அவரது மூன்று நண்பர்கள் அனைவரையும் புகார் கொடுத்து காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ளார். இதன் பேரில் போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.