டூவீலரில் அசால்ட்டா ரைடு போறிங்களா? உசுரே போச்சு.. தனியார் பேருந்து மீது மோதி இளைஞர்கள் 2 பேர் பலி.!



Dharmapuri Harur Accident 2 Youth Died 

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கம்பைநல்லூர், அரியகுளம் பகுதியில், நேற்று மாலை நேரத்தில் தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்தது. 

இந்த பேருந்துக்கு எதிர்திசையில் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி நோக்கி, வேகத்துடன் இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. வளைவு பகுதியில் பேருந்து வருவதை அறியாமல், இருசக்கர வாகன ஓட்டி வந்துள்ளார். 

இதையும் படிங்க: சொத்து தகராறில் பயங்கரம்.. சித்தி அடித்துக்கொலை.! பாலக்கோட்டில் பகீர் சம்பவம்.!

இதனால் பேருந்தின் மீது எதிர்திசையில் வந்து வாகன ஒட்டி மோதி இருக்கிறார். இந்த சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த அரூர் காவல்துறையினர், இவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு வெடித்து 6 வயது சிறுமி உடல் துண்டாகி மரணம்; விளையாடச் சென்றபோது நடந்த சோகம்.!