ஆஃப் பாயில் பிரியரா நீங்கள்.? உஷார்.! உங்களுக்கு தான் இந்த அதிர்ச்சி தகவல்.!



are-you-eating-half-boiled-eggs-so-often-this-warning-i

முட்டைன்னா ஒரு சிலர்க்கு அலாதி பிரியம். சிலருக்கு  முட்டை இருந்தாலே போதும் அத வச்சே ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடுவாங்க. முட்டையில பல வெரைட்டி இருக்கு ஃபுல் பாயில், ஆஃப் பாயில்,கலக்கி, அவிச்ச முட்டை ,இப்படி சொல்லிட்டே போகலாம். ஆனா ஒரு சில பொருள முழுசா வேக வைக்காமல் சாப்பிடறதுல நிறைய தீமைகள் வரும்.

health tipsஅதுல ஒன்னு முட்டை  இப்போ துரித உணவகங்கள்ல கிடைக்கிற மயோனைஸ் என்கிற ஒரு சாஸ் வகையில பச்சை முட்டை தான் அதிகப்படியா யூஸ் பண்றாங்க.அது ஹெல்த்துக்கு அவ்வளவு நல்லது இல்லன்னு ஆய்வு பூர்வமாவே நிரூபிச்சுருக்காங்க. அந்த வரிசையில ஆஃப் பாயில் நிறைய எடுத்துக்கிட்டாலும் நிறைய பின் விளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கு. சால்மோனேல்லா என்னும் பாக்டீரியா முழுமையாக சமைக்கப்படாத முட்டையில் இருக்கும்.

health tipsஅதனை சரியாக வேக வைக்காமல் உண்ணும்போது  பாக்டீரியா நம் உடலில் நுழைந்து வாந்தி ஜுரம் வயிற்று வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். சில வகை சால்மோனேல்லா டைபாய்டு போன்ற அதிதீவிர காய்ச்சலையும் ஏற்படுத்தவல்லது. இவ்வகையான பாக்டீரியா தொற்றுக்களை குறைக்க உணவை நன்றாக சமைத்து சாப்பிடுவது நல்லது.