மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகள் ஏதேனும் விழுங்கிவிட்டால் என்ன செய்வது?. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
நமது வீட்டில் இருக்கும் சில குழந்தைகள் அவ்வப்போது ஏதாவது பொருள் கிடைத்தால் அதனை எடுத்து ஆசையாக வாயில் வைத்து சாப்பிடும். நாம் அவ்வப்போது கொடுக்கும் சாக்லேட் போன்ற சில பொருட்களும் குழந்தைகளின் மூச்சை அடைப்பது போல விபரீதத்தை ஏற்படுத்தும்.
சாக்லேட் மட்டுமல்லாது ரப்பர், கோலிக்குண்டு, பாசி, ஹேர் பின், நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி போன்றவற்றையும் குழந்தைகள் அவ்வப்போது விழுங்கிவிடும். குழந்தைகள் விழுங்கும் பொருட்கள் முதலில் அவர்களின் உணவு குழாய்க்கு செல்லும்.
சில நேரத்தில் இவை இரண்டையும் பிரிக்கும் தொண்டை பகுதியில் சிக்கிக் கொள்ளும். மூச்சு குழாய்க்குள் சென்று அடைத்துக் கொள்ளும் பட்சத்தில், சுவாச பாதையானது தடைபடும். இதனால் மூச்சு விட இயலாது உணவு குழாய்க்குள் சென்று, அதை இரைப்பை வழியாக வயிற்றுக் வெளியேற்றும்.
அந்தந்த பொருளின் தன்மையை பொறுத்து பாதிப்பு இருக்கும். சில பொருட்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி வெளியே வந்துவிடும். குழந்தைகள் ஏதாவது விழுங்கிவிட்டால் அவர்களை இரும சொல்ல வேண்டும். அவர்களை குனிய வைத்து முதுகு பகுதியில் ஐந்து முறை தட்டினால் அந்த பொருள் வெளியே வரும்.
வராவிட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்வது நல்லது. உங்களுக்கு முதலுதவி குறித்த எவ்வித புரிதலும் இல்லை என்றால், யோசனை இன்றி உடனடியாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிட வேண்டும்.