மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாழை இலையில் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
வாழை மரத்தின் இலை, பழம், பூ, தண்டு என வாழையின் பாகங்கள் ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்நாட்களில் கட்டாயம் தேவைப்படுபவை, ஆயுளை நீடிக்கும் சக்தி கொண்டவை.
வாழை இலையில் சாப்பிடுவோருக்கு நோய்களே பெரும்பாலும் ஏற்படாது. அவர்களின் தோல் பளபளப்பாகும். உடல் நலம்பெற்று, மந்தம், வலிமை குறைவு, இளைப்பு போன்ற பிரச்சனைகள் சரியாகும். பித்தம் தொடர்பான கோளாறுகளும் கட்டுப்படும்.
தமிழர்களின் வாழ்வியலில் மிகவும் நெருங்கிய தொடர்புடைய வாழை ஒவ்வொரு விழாக்களின் போதும், உணவருந்தும்போது வாழை இலையில் அவை பரிமாறப்படும்.
வாழை இலையில் இருக்கும் பசைத்தன்மை, உணவு எளிதில் செரிமானமாக உதவி செய்யும். வயிற்றில் புண்கள் இருந்தால், அவை விரைந்து சரியாகும். பசியை தூண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நலமான வாழ்வு கிடைக்கும்.
வாழை இலையில் நாம் சாப்பிட்டு வந்தால், நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். இதில் இருக்கும் குளோரோபில் அல்சர், தோல் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இரத்தத்தை சுத்திகரித்து நன்மை வழங்கும். சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தவிர்க்கும். சிறுநீர்ப்பை நோய்களும் சரியாகும். நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். உணவை செரிக்க உதவும்.