குளிர் மழை காலங்களில் இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?!



benefits-of-drinking-fresh-water-during-the-rainy-seaso

இளநீர் தினமும் குடிப்பதால் உடலுக்கு போதுமான நீர் சத்து கிடைக்கும். கர்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது. இப்போது, குளிர் மற்றும் மழைக்காலங்களில் இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி :

Fresh water

இளநீரில் உள்ள "அயர்ன் சத்துக்கள் " மற்றும் " கால்சியம் " நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் முதுமை தோற்றம் விரைவில் வராமல் தடுக்கிறது. மேலும், இளநீர் செரிமானக் கோளாறுகளை சரி செய்கிறது.

இதையும் படிங்க: சருமம் மற்றும் கல்லீரலை பாதுகாக்கும் முள்ளங்கி..! இதில் இவ்வளவு நன்மைகளா?!

வயிற்று பிரச்சனையை சரி செய்கிறது :

இளநீர் தினமும் குடிப்பதால் வயிற்றில் "அல்சர் " தொற்று ஏற்பட்டு இருந்தாலும் அதனை சரி செய்கிறது. ஆகையால் மழைக்காலத்திலும் இளநீர் குடிப்பது நல்லது. மேலும், உடல் சூட்டை குறைத்து, புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். இதில் உள்ள வைட்டமின்கள் டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்கும். அதோடு வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் பிரச்சனைகளை சரி செய்கிறது.

தோல் மற்றும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது :

Fresh water

இளநீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் தோல் மற்றும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும், இளநீரில் "பொட்டாசியம்" அதிகம் இருப்பதால் சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதோடு இன்பெக்சன் நோய்கள் வராமல் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இது போன்ற நோய்கள் மழைக்காலங்களில் பொதுவான பிரச்சனை ஆகும்.

இதையும் படிங்க: இந்த பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிட கூடாது.! ஏன் தெரியுமா.?!