#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Natural Viagra: முருகைக்காயில் உள்ள அசத்தல் நன்மைகள்.. தாம்பத்திய கொடையுள்ளத்தின் அருமருந்து.!
எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கைக்காய் தன்னகத்தே பல பயன்களை கொண்டுள்ளது. முருங்கை பூ, கீரை, காய் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அதில் உள்ள வைட்டமின் பி, பி 2, சி, இரும்புசத்து, புரத சத்து, நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், பசுபிராஸ் போன்றவை உடலுக்கு பேருதவி செய்கிறது.
முருங்கை கீரையை உணவில் சேர்ந்து கொண்டால் உடல் சூடு குறையும், வியர்க்குரு பிரச்சனை சரியாகும். கை, கால் & மூட்டு வலி தடுக்கப்படும். கால்சியம் சத்து எலும்பை பலப்படுத்தும். வயிறு மற்றும் வாயில் உள்ள புண்களை சரி செய்யும்.
கண்களை குளிர்ச்சியடைய செய்து, கண் பார்வைக்கு வழிவகை செய்யும். கண்கள் சார்ந்த பிரச்சனையை தவிர்க்க உதவும். சரும நோய்கள் குணமாகும். சரும கொப்புளங்கள் சரியாகும். சிறுநீர் பெருக்கம் அதிகமாகும். சிறுநீரகத்தை வலுப்பெற செய்யும்.
மன நலத்தை மேம்படுத்தி, மன அழுத்த பிரச்சனையை குறைக்கும். இரத்த சோகை பிரச்னையை குணமாக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு பெருமளவு ஏற்படும் இரத்த சோகையை தவிர்க்க உதவும். முருங்கை பூவினை உணவில் சேர்த்தால் நாவின் சுவையின்மை பிரச்சனை சரியாகும்.
முருங்கை பூவை பாலில் சேர்த்து பனங்கற்கண்டோடு 48 நாட்கள் குடித்து வந்தால் தாம்பத்திய உறவுகளில் நாட்டம் அதிகமாகும். ஆண்மை அதிகரிக்கும். தம்பதிகளின் காதல் மென்மேலும் வலுப்படும். பெண்களுக்கு கர்ப்பப்பையை வலுப்பெற செய்யும். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த உதவும்.
கூந்தலின் வளர்ச்சிக்கும், கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கும் சரியான தீர்வாக அமையும். வயதான தோற்றத்தை கட்டுப்படுத்தும். சுவாச கோளாறுகளை சரி செய்யும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதியை குணப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும். குழந்தைப்பேறு கொண்ட பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவி செய்யும்.
உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி, உடல் பொலிவான தோற்றத்தை பெரும். இதயத்தின் செயல்பாடுகளை சீராக்கும். வாயு தொல்லையை சரி செய்யும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பற்களை வலுப்படுத்தும்.
முருங்கை கீரையை கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.