கேரட்டை இப்படி சாப்பிட்டு பாருங்கள்.. அசந்துபோகவைக்கும் மருத்துவ குணங்கள்.!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் இ போன்றவற்றை கொண்டது ஆகும். இதனை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிட்டால் அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.
இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்கள், சருமம், உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பீட்டா கரோட்டின் உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் வல்லமை கொண்டது ஆகும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலின் தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்பட்டு, குடல் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
கேரட் சாறுடன் எலுமிச்சை சாறை கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் சரியாகும். பகுதியளவு வேகவைக்கப்பட்ட முட்டையுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வயிற்றுப்பொருமல், வயிற்றுப்போக்கு, மூல உபத்திரம், வயிற்று வலி இருப்பவர்கள் கேரட்டை அரைத்து சாறாக குடிக்கலாம்.
பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை விரும்பாத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் உள்ள கால்சியம் எளிதில் பிற உணவுகளை ஜீரணம் செய்யும். வாயு தொல்லை காரணமாக அவதிப்படும் நபர்களுக்கு பசியை ஏற்படுத்தி, சிறுநீரை பெருக்கும். சருமம் வறண்டு அரிப்பு ஏற்பட்டு இருப்பின், அதனையும் குணப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் கேரட்டை குறைந்தளவு சாப்பிடுவது நல்லது. கேன்சர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் கீமோதெரபியின் பக்கவிளைவை குறைக்க 48 நாட்கள் கேரட் ஜூஸ் குடிக்கலாம். சிறுநீர் கழிக்கும் நேரத்தில் ஏற்படும் எரிச்சல், புண்கள் போன்றவற்றை குணமாக்க கேரட்டை பச்சையாக சாப்பிட வேண்டும். மாலைக்கண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும், இதயநோய் ஆபத்துகளை தடுக்கவும் கேரட்டை பச்சையாக சாப்பிடலாம்.