ரம்பூட்டான் பழம் சொல்லும் ரம்மியமான ரகசியம்.. உடலுக்கு இவ்வுளவு நன்மைகளா?..!



benefits-of-rambutan-fruit-tamil

உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் கனிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய பழங்களுள் ஒன்றாக இருக்கும் ரம்பூட்டான் குறித்த தகவலை இன்று காணலாம்.

ரம்பூட்டான் ஆசிய நாடுகளான இந்தோனேஷியா மற்றும் மலேசியாவை தாயகமாக கொண்ட பழம் ஆகும். இது 100 கிராம் எடை அளவு மட்டுமே இருக்கும். ஆனால், இதில் 84 % கலோரி, 40 % வைட்டமின் சி, 28 % இரும்புசத்து உள்ளன. இதன் வித்தியமான பெயரைப்போலவே, தோற்றமும் முட்களுடன் வித்தியாசமாக காணப்படும். இதன் விதை அனைவரையும் சுண்டி இழுக்கும். சதைப்பகுதி இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருக்கும்.

இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் ஆரோக்கியத்திற்கு உதவிடுகிறது. உடல் பருமனை கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகிறது. மனிதனின் இதய குழாய்களில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி, மாரடைப்பு பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனுள் இருக்கும் நியாசின் வேதிப்பொருள், நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துகிறது. ஆண்டி-ஆக்சிடென்ட் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. 

Rambutan Fruit

தலை முடி, தோல், கை-கால் நகங்கள் போன்றவற்றை பளபளப்புடன் வைக்கவும் பேருதவி செய்கிறது. உடலை சீராக இயக்க தேவையான இரும்பு சத்து, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் பயன்படுகிறது. நுரையீரலில் இருக்கும் ஆக்சிஜன் திசுக்களுக்கு செல்லும் வேலையை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

இந்த ரம்பூட்டான் பழத்தில் மட்டும் 83 வகையான வைட்டமின்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனைப்போல, தாம்பத்திய வாழ்க்கை சிறக்கவும் உதவி செய்கிறது. எலும்பு மண்டலத்தை வலிமையாக்கவும், நாட்பட்ட நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும், இரத்த சிவப்பணு, வெள்ளையணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நீர்சத்து, விரைவில் நாக்கு வறண்டுபோவதை தவிர்க்கவும் உதவுகிறது. புற்றுநோயை குறைக்கவும் உதவி செய்கிறது.