மகிழம்பூவுக்கு இவ்வுளவு மருத்துவ குணம் உள்ளதா?.. தெரிஞ்சுக்கோங்க, ஆச்சரியப்படுவீங்க.!
மலர்கள் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் மனம் தான். ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு மனம் இருக்கும். இவற்றில் அதீத மனம் கொண்ட பூவாக மகிழம்பூ உள்ளது. இதன் அழகும், நறுமணமும் எழில்கொஞ்சும். இது சுடுவதற்கு மட்டுமல்லாது, மருத்துவ குணத்தையும் கொண்டுள்ளது.
மகிழமரம் அடர்த்தியான கரும்பச்சை இலைகளை கொண்டது ஆகும். மகிழம்பூ பார்க்க சந்தன நிறத்தில் இருக்கும். காய்ந்ததும் மரப்பட்டை நிறத்திற்கு மாறும். பிற பூக்கள் பொதுவாக வாடியதும் மனம் குறையும். ஆனால், மகிழம்பூ காய்ந்தாலும் தனது நறுமணத்தை இழக்காமல் அதிகரிக்கும். இது மகிழம்பூவின் தனிசிறப்பு ஆகும். மகிழம்பூவின் காய், பழம், இலை, பட்டை போன்றவை மருத்துவ குணங்கள் கொண்டது ஆகும்.
மகிழம் காய்:
மகிழங்காயை பல்லில் வைத்து மென்றால், அதில் இருந்து வரும் பாலை அப்படியே சாப்பிடலாம். இது துவர்ப்பாக இருக்கும். இந்த காயால் பல் வலி குறைகிறது. மாதம் ஒருமுறை மகிழம் காயை சாப்பிட்டு வந்தால், பல் வலி குறையும், ஈறுகள் இறுகி பற்கள் ஆடுவது நிற்கும்.
மகிழம் பழம்:
மகிழம் பழம் நல்ல நறுமணத்துடன் இருக்கும். சாப்பிடவும் சுவையுடன் இருக்கும். இதனை சாப்பிட்டால் ஒற்றை தலைவலி பிரச்சனை குறையும். தசைகளின் இறுக்கம் தளர்வதால் தலைவலி நீங்கி, நல்ல உறக்கம் ஏற்படும். மன அழுத்தம், மனசோர்வு போன்றவை சரியாகும். மகிழம் பழத்தை ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம்.
மகிழம் பூ:
மகிழம் பூவினை கஷாயம் போல காய்ச்சி குடித்து வந்தால், பல் வலி குணமாகும். 10 மகிழம் பூக்களை டம்ப்ளர் நீரில் சேர்த்து, அது அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இதனை உலர்த்தி பொடியாக செய்து மூக்குப்படி போல உறிஞ்சு வந்தால், தலையில் உள்ள நீர் வெளியேறி தலைவலி, தலைபாரம் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கற்கண்டு, பால் சேர்ந்து உறங்கும் முன் குடித்து வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும். உடலின் வெப்பம் குறையும்.
மகிழ்ப்பட்டை :
மகிழ்ப்பட்டையை உலர்த்தி பொடியாக செய்து, ஒரு சிட்டிகை அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடித்தால், கருப்பை பலமாகும். காய்ச்சல் போன்றவை ஏற்படாது. உடல் வெப்பம் குறையும்.
இதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து குழைத்து தடவி, பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் தோல் வறட்சி நீங்கும். பற்பொடி போல உபயோகம் செய்தால், பற்களுக்கு நல்லது. வாய்புண் உள்ளவர்கள் மகிளம்பட்டையை கொதிக்க வைத்து, அந்த நீரை வைத்து வாய் கொப்புளித்தால் வாய்ப்புண் குறையும்.
மகிழ இலைகள்:
மகிழ இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆரிய நீரை வைத்து உடலை துடைத்தால் உடலின் வெப்பம் குறைந்து காய்ச்சல் கட்டுப்படும்.
மகிழ விதை:
மகிழ விதைகளை காயவைத்து பொடியாக மாற்றி, நீரில் கொதிக்கவைத்து கற்கண்டு மற்றும் பால் சேர்த்து குடித்தால் உடல் வலிமையாகும், அழகுபெறும், ஆண்மை அதிகரிக்கும். மகிழ விதையை அரைத்து பாலில் சேர்த்து குடித்தால் தாது விருத்தி அதிகரிக்கும். இதனை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் அளவு முக்கியம்.
மகிழம்பூவின் இலைச்சாறு நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும். மகிழம்பூவின் நறுமண எண்ணெய் பூஞ்சையை எதிர்த்து போராடும். மகிழம்பூ சாறு உடல் வெப்பத்தை தணிக்கும். மகிளம்பட்டை அழற்சியை நீக்கும், ஆண்மையை அதிகரிக்கும்.